/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனு அளிக்க நீண்ட வரிசை காத்திருந்த பொதுமக்கள்
/
மனு அளிக்க நீண்ட வரிசை காத்திருந்த பொதுமக்கள்
ADDED : செப் 03, 2024 05:25 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 540 பேர் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மனு அளிக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கைகள் இல்லாததால், கூடுதல் கட்டட வராண்டாவில் நீண்ட வரிசையில், வெகு நேரம் காத்திருந்து, மனு அளிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதில், வயதானவர்கள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்பட்டனர். மனு அளிக்க வருவோருக்கு, கூட்டரங்கின் ஒரு பகுதியில் இருக்கைகள் அமைத்து, வராண்டாவில் நிற்க வைப்பதை தவிர்க்கலாம் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.