/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்
/
ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஆக 17, 2024 04:04 AM
பென்னாகரம்: ஏரியூர் அடுத்து உள்ள சிகரலஅள்ளியில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் மக்கள் மறியலில் நேற்று, ஈடுபட்டனர்.
ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிகரலஅள்ளியில், 500 க்கும், மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த ஒரு வருடமாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என கூறி அதிகாரிகளிடம், அஜ்ஜனள்ளி பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் பல முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் நேற்று, காலை 7:30 மணிக்கு பென்னாகரம் - சிகரலஅள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஏரியூர் போலீசார் மற்றும் பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.