/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
/
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 28, 2024 02:25 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரையில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு போட, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் லோக்சபா தேர்தல் பணியில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், லோக்சபா தேர்தலில், பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி ஓட்டு போடலாம் என்பதை வலியுறுத்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.இதை, ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், கல்லாவி தமிழரசி, சிங்காரப்பேட்டை சந்திரகுமார் மற்றும் அதிவிரைவு படை போலீசார் என, பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் கொடி அணிவகுப்பு பேரணி, ஊத்தங்கரை திருப்பத்துார் மெயின்ரோடு சாலையில் தொடங்கி, பஸ் ஸ்டாண்ட் வழியாக, ஊத்தங்கரையின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று, ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் முடிவுற்றது.இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்வலமாக சென்றனர்.