/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை
/
ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை
ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை
ஆவணி மாதம் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் பூஜை
ADDED : ஆக 18, 2024 03:40 AM
தர்மபுரி: ஆவணி மாதம் பிறப்பையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
ஆவணி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மலையனுார் கோபாலசு-வாமி கோவிலில், சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்-குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது. பின், பெருமாளுக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பாப்பாரப்பட்டி, பிக்கிலி, சோமன-ஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கடைவீதி பிர-சன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், கோட்டை பெருமாள் கோவில்,
எஸ்.வி., ரோடு சென்னகேசவ பெருமாள் கோவில், அதியமான்-கோட்டை சென்றாய பெருமாள் கோவில், இண்டூர் வெங்கட்ர-மண சுவாமி பெருமாள் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்-டத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களில், ஆவணி சனிக்கிழ-மையையொட்டி நேற்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, அலங்-காரங்கள் நடந்தன.