/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துார் நுாலகத்தில் காகித மடிப்பு கலை பயிற்சி
/
கடத்துார் நுாலகத்தில் காகித மடிப்பு கலை பயிற்சி
ADDED : மே 25, 2024 02:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் கிளை நுாலகத்தில், குழந்தைகளுக்கான காகித மடிப்பு கலை பயிற்சி வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் சந்திர சேகரன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் மலர்வண்ணன், முருகன், நெடுமிடல், மகாலிங்கம், ராதாகிருஷ்ணன், சாமிக்கண்ணு, விஜயகுமார்,
உத்தமன் முன்னிலை வகித்தனர்.
நுாலகர் சரவணன் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி பயிற்சியை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் தியாகசேகர் பயிற்சி வழங்கினார். தகடூர் புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் தங்கமணி சிறப்புரையாற்றினார். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வாசகர் அறிவுடைநம்பி நன்றி கூறினார். தகடுர் புத்தக பேரவை பயிற்சி ஏற்பாடுகளை செய்தது.

