/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்துக்கு வலியுறுத்தல்

ADDED : செப் 05, 2024 03:29 AM
அரூர்: முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்-ணயம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்-ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், நரிப்பள்ளி, பாப்பி-ரெட்டிப்பட்டி உள்ளிட்ட, சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு, இறவை பாசனம் மற்றும் மானாவாரியாக, 30,000க்கும் மேற்-பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளி கிழங்கு நடவு செய்துள்-ளனர். இன்னும் ஒரு மாதத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை துவங்கவுள்ள நிலையில், முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, மர-வள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை எழுந்துள்-ளது. இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் பணி, இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்-ளது. மரவள்ளி கிழங்கிற்கு, தனியார் ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே, ஆலை அதிபர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, மரவள்ளி கிழங்கிற்கு, உரிய விலை நிர்ணயம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.