/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொள்முதலில் முறைகேடு என பாலை சாலையில் ஊற்றி எதிர்ப்பு
/
கொள்முதலில் முறைகேடு என பாலை சாலையில் ஊற்றி எதிர்ப்பு
கொள்முதலில் முறைகேடு என பாலை சாலையில் ஊற்றி எதிர்ப்பு
கொள்முதலில் முறைகேடு என பாலை சாலையில் ஊற்றி எதிர்ப்பு
ADDED : ஆக 05, 2024 11:26 PM
தர்மபுரி:ஆவின் பால் கொள்முதல், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி, பெரமாண்டபட்டியை சேர்ந்த, பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பெரமாண்டபட்டியில், 25 ஆண்டுகளாக, ஆவின் நிறுவன பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்கள், பாலின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, ஒரு லிட்டர் பாலுக்கு, 5 ரூபாய் வரை குறைத்து, 30 முதல், 31 ரூபாய் மட்டும் வழங்குகின்றனர். தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலுக்கு, 35 முதல், 37 ரூபாய் வரை வழங்குகின்றனர்.
எனவே, ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் சம்மந்தபட்ட நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரமாண்டபட்டியை சேர்ந்த, 20 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், சாலையில் பாலை ஊற்றி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, இருவரை மட்டும், கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.