/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஆக 03, 2024 01:18 AM
நல்லம்பள்ளி, தர்மபுரி அருகே, மேட்டார் பழுதால் காட்சிப் பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி, நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிப்பட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. பின், இத்தொட்டியின் மின்மோட்டார் பழுது காரணமாக இதில் தண்ணீர் வரவில்லை. இதனால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. சாமிசெட்டிப்பட்டி கிராம மக்களின் நலன்கருதி, பழுதான நிலையில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியின் மின் மோட்டாரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.