ADDED : ஜூலை 26, 2024 03:30 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, மாதேமங்கலம் பஞ்., குட்டூரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்குள்ள வட்டார குறுவள மைய கட்டடத்தில், ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 20 குழந்தை கள் கல்வி கற்க வந்து செல்கின்றனர். குட்டூர் பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த அங்கன்வாடி மையம் முன்புள்ள கழிவுநீர் கால்வாயில் செல்கிறது. இதன் அருகே, செடிகள் அதிகம் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இவை கால்வாயை ஆக்கிரமித்துள்ளதால், கழிவுநீர் கால்வாயில் வழிந் தோடாமல் தேங்கியுள்ளது. இதேபோல், இந்த அங்கன்வாடி மையம் முன் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி, குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, அங்கன்வாடி குழந்தைகளின் நலன்கருதி, அதன் அருகே உள்ள புதரை அகற்றி, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.