/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை
/
அரசு குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், ஜூன் 30-ம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில் கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை சார்பில், 15க்கும் மேற்பட்ட, வீடுகள் மற்றும் அலுவலகம் கட்டப்பட்டது.
ஒரு சில ஆண்டுகள் மட்டும் பயன்பாட்டில் இருந்த நிலையில், அதன் பின், குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப் படாததால், தற்போது, சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. எனவே, இக்குடியிருப்புகளை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.