ADDED : ஆக 16, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, நடேசா பெட்ரோல் பங்க் வரையுள்ள சேலம் செல்லும், 2 கி.மீ., துார பைபாஸ் சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
மேலும், சில இடங்களில் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த குழிகளில் பேட்ச் ஓர்க் மேற்கொண்டனர். அவை, ஒரு சில நாட்களில் மீண்டும் சேதமடைந்தது. எனவே, முறையாக சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

