/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் வாலிபரிடம் ரூ.5.57 லட்சம் மோசடி
/
ஓசூர் வாலிபரிடம் ரூ.5.57 லட்சம் மோசடி
ADDED : ஆக 05, 2024 02:20 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சித்தனப்பள்ளி, விஷ்ணு ஆனந்தம் கேலக்சி லே அவுட்டில் வசிப்பவர் ரமேஷ், 30; இவரது மொபைல் எண்ணுக்கு ஒரு 'லிங்க்' வந்தது. 'கிளிக்' செய்து உள்ளே சென்றபோது, ஓட்டல்களுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் பணம் கிடைக்கும் என கூறப்பட்டது.
இதை நம்பிய ரமேஷ், சில ஓட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்தபோது பணம் கிடைத்தது. மீண்டும் லிங்கில், பணம் டிபாசிட் செய்தால், ஊதியத்துடன் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டது. இதை நம்பி பல்வேறு பரிவர்த்தனைகளில் ஒரு வங்கி கணக்குக்கு, 5.57 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தார். அதன் பின் அவருக்கு பணம் வரவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதா விசாரிக்கிறார்.