/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்
/
புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்
புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்
புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : ஆக 29, 2024 02:14 AM
காரிமங்கலம், ஆக. 29-
தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் சோதனை நடத்தினர். பைசுஹள்ளி, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பொன்னேரி, கெரகோடஹள்ளி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம், மளிகை கடை, பேக்கரி, ஓட்டல், பெட்டிக்கடை மற்றும் டீ கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில், பொன்னேரியிலுள்ள மளிகைக் கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. காரிமங்கலத்தில் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்து, 3 கடை உரிமையாளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஊறுகாய், உள்ளூர் குளிர்பானங்கள் மற்றும் சமைத்த, வறுத்த இறைச்சி உணவுகளில் செயற்கை நிறம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, உணவு மாதிரி சேகரித்து, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.