/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வத்தல்மலையில் ஆசிரியர் பற்றாக்குறை தவிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்
/
வத்தல்மலையில் ஆசிரியர் பற்றாக்குறை தவிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்
வத்தல்மலையில் ஆசிரியர் பற்றாக்குறை தவிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்
வத்தல்மலையில் ஆசிரியர் பற்றாக்குறை தவிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்
ADDED : ஆக 19, 2024 12:22 AM
தர்மபுரி: வத்தல்மலையிலுள்ள தொடக்கப் பள்ளியில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், மாணவர்-களின் கல்வி பாதிக்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றச்-சாட்டு தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்.,ல் வத்தல்மலை உள்ளது. இங்கு, சின்னாங்காடு மற்றும் பெரியூரில் அரசு தொடக்-கப்பள்ளி உள்ளது. இதில், சின்னாங்காடு தொடக்கப்பள்ளியில், 52 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, ஒரு தற்காலிக ஆசிரியர் மட்டும் உள்ளார். அதேபோல், பெரியூர் அரசு தொடக்கப்பள்-ளியில், 50 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, ஒரு ஆசிரியர் உள்ளார். இந்த இரு பள்ளியிலும், தலைமை ஆசிரியர் பணி-யிடம் காலியாக உள்ளது. மேலும், 50 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு, ஒரு ஆசிரியர் மட்டும் உள்ள நிலையில், சில சமயங்-களில் ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும்போது,
பாடம் நடத்த ஆசிரியரின்றி, மாணவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதில், வத்தல்மலை கிராமங்களிலுள்ள பெற்றோர், அரசு பள்ளியை மட்டும் நம்பி படிக்க வைக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்வதில்லை. மேலும், வத்தல்மலை மலை கிராம பகுதி என்பதால், பணி வழங்கினாலும் அங்கு செல்வதை பெரும்பாலான ஆசிரியர்கள் தவிர்க்கின்றனர். வத்தல் மலையில், சுற்றுலா தலமாக்கும் பணிக்கு, மாவட்ட நிர்வாகம் முக்கியத்-துவம் அளித்து வரும் நிலையில், மலைவாழ் மக்கள் மாணவர்-களின் நலன் காக்க, ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

