/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி மேலாண்மை குழு கூட்டம்
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி மேலாண்மை குழு கூட்டம்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி மேலாண்மை குழு கூட்டம்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி மேலாண்மை குழு கூட்டம்
ADDED : ஆக 27, 2024 02:33 AM
தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளியிலுள்ள அரசு உயர்நிலைப்-பள்ளியில், 180 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 24 அன்று பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு கூட்டம், பள்ளி வளா-கத்தில் நடந்தது. இதில், பள்ளி பொறுப்பாசிரியர் விக்ரமன், கணித ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். காரிமங்கலம் தாசில்தார் கலைச்செல்வி நுண் பார்வையாளராக பங்கேற்றார். முன்னதாக, பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடந்தது.
இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவராக உஷா, துணைத்த-லைவராக வளர்மதி உட்பட, 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்-பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்-பட்டது.
தொடர்ந்து, அறிவியல் கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டனர். இதில், எரிமலை பொங்குதல், சூரிய ஆற்றல், உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் குறித்து, மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியை மோகனசுந்தரி மற்றும் வெங்கடேசன் செய்திருந்தனர். ஆசிரியர் சுபாஷினி நன்றி கூறினார்.