/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சார் - பதிவாளர் ஆபீசில் தேசியக்கொடி அவமதிப்பு
/
சார் - பதிவாளர் ஆபீசில் தேசியக்கொடி அவமதிப்பு
ADDED : ஆக 09, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி சார் - பதிவாளர் அலுவலகம், குப்பாண்டிபாளையத்தில் உள்ளது. அங்கு தேசியக்கொடியை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., நெசவாளர் பிரிவு சேலம் மேற்கு மாவட்ட செயலர் செங்கோட்டையன் கூறியதாவது: மகுடஞ்சாவடி சார் - பதிவாளர் அலுவலக நுழைவாயில் அருகே, 'ஏசி' இயந்திரத்தை-யொட்டி, இரு தேசிய கொடிகளை அலட்சியாக சுருட்டி வைத்-துள்ளனர். கொடியின் பல இடங்களில் கரையான் அரித்து ஓட்டை விழுந்துள்ளது. கொடியை அவமதித்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.