/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறு, குறு தொழில் நிறுவன தொழில் முனைவோர் கருத்தரங்கு
/
சிறு, குறு தொழில் நிறுவன தொழில் முனைவோர் கருத்தரங்கு
சிறு, குறு தொழில் நிறுவன தொழில் முனைவோர் கருத்தரங்கு
சிறு, குறு தொழில் நிறுவன தொழில் முனைவோர் கருத்தரங்கு
ADDED : ஜூலை 28, 2024 04:03 AM
தர்மபுரி: சிறு, குறு தொழில் நிறுவனங்களின், தொழில் முனைவோர் கருத்-தரங்கு மற்றும் உறுப்பினர் பதிவு தர்மபுரியில் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில், பெரிய அளவிலான தொழில் நிறுவ-னங்கள் இல்லாத நிலையில், சிறுகுறு நிறுவனங்களின் எண்-ணிக்கை அதிகளவில் உள்ளது. இதில், நிறுவனங்களின் முன்-னேற்றத்திற்காக, அவற்றை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பிற்கான பதிவு உள்-ளிட்டவை நடந்தது. கூட்டமைப்பு தலைவர் வினோத் தலைமை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி, தொழில் முனைவோர் கூட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அரசின் நிதி உதவி, மானியம் உள்ளிட்டவை பெற வழிவகை செய்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆலோ-சனை வழங்கினர். மேலும், மாநகராட்சிகளில் மட்டும் செயல்ப-டுத்தப்பட்டுள்ள நியோ டைட்டில் பார்க்கை, தர்மபுரியில் அமைக்க வேண்டும். சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு கருத்த-ரங்கு மற்றும் மாநாடு தர்மபுரியில் நடத்த வேண்டும். தொழில் கட்டமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து உறுப்பினர் பதிவை, தர்மபுரி பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்ட சிறு-குறு நிறுவனங்களின் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.