/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் நேரில் ஆய்வு
/
சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் நேரில் ஆய்வு
சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் நேரில் ஆய்வு
சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : ஆக 03, 2024 01:18 AM
தர்மபுரி,தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த இருளர் கொட்டாய் பழங்குடியினர் பகுதியில், தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 20 நாட்கள் வரை தொடர்ந்து நடக்கும் இந்த பணியால், பழங்குடியின மக்கள் தொகை விபரம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நிலைமைகள் அறியப்படும்.
மேலும், நிலவகை பயன்பாடு, நல்வாழ்வு மற்றும் சுகாதாரம், நலத்திட்ட பயனாளிகள் பற்றிய விவரங்கள், உட் கட்டமைப்பு குறித்த விவரங்கள், பழங்குடியினருக்கான வன உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நோக்கமாக கொாண்டு இந்த கணக்கொடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியில், 383 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று அவர்களிடம் விசாரித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை, மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சி.இ.ஒ., ஜோதி சந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.