sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி, அரூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

/

தர்மபுரி, அரூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, அரூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, அரூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 09, 2024 04:06 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மற்றும் அரூரிலுள்ள அரசு ஐ.டி.ஐ., தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மற்றும் அரூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ., தொழிற் பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், 14 வயது முதல், 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பெண்களுக்கு, 14 வயது முதல் உச்ச வரம்பில்லை. இதற்கு கல்வி தகுதியாக, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்பியாள் பயிற்சிக்கு, 2 வருடமும், வெல்டர் பயிற்சிக்கு ஓராண்டு அனுபவமும் இருக்க வேண்டும். மேலும்,

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், மோட்டார் வண்டி டீசல் மற்றும் இயந்திர வேலையாள் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகுதியுடையோர், www.skilltraining.tn.gov.in என்ற முகவரியிலுள்ள விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். பயிற்சியின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும், 750 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், பாட புத்தகம், வரைபட கருவிகள், விலையில்லா லேப்டாப், சீருடை, பஸ் பாஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94458 03042, 93617 45995 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us