/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொபட் ஓட்டிய மாணவர்கள் மின்கம்பத்தில் மோதி காயம்
/
மொபட் ஓட்டிய மாணவர்கள் மின்கம்பத்தில் மோதி காயம்
ADDED : ஆக 18, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டியை சேர்ந்த, 14 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவன் நேற்று காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் பால் சொசைட்டிக்கு சென்றான்.
பின்னால், 12 வயதுடைய தன் தம்பியை அமர வைத்து கொண்டு ஓட்டினான். அரூர் - தொட்டம்பட்டி சாலையில் சென்-றபோது சாலையோர மின்கம்பத்தின் மீது மொபட் மோதியது. இதில், சகோதரர்கள் இருவரும் காயமடைந்தனர். அவரது தந்தை இருவரையும் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் அனும-தித்தார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.