/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் தினமும் ௧௦ கி.மீ., நடக்கும் மாணவர்கள்
/
பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் தினமும் ௧௦ கி.மீ., நடக்கும் மாணவர்கள்
பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் தினமும் ௧௦ கி.மீ., நடக்கும் மாணவர்கள்
பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் தினமும் ௧௦ கி.மீ., நடக்கும் மாணவர்கள்
ADDED : ஆக 30, 2024 01:11 AM
அரூர், ஆக. 30-
பள்ளி சென்று வர பஸ் வசதி இல்லாததால், பாப்பநாயக்கன்வலசை கிராம மாணவர்கள், தினமும், 10 கி.மீ., துாரம் வரை பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்வலசையில், 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சென்று வர பஸ் வசதியில்லை. இதனால், மாணவ, மாணவியர் காலை மற்றும் மாலை நேரங்களில், 10 கி.மீ., வரை பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:
பள்ளிக்கு நடந்து சென்று விட்டு வருவதால், வீட்டிற்கு சென்றவுடன் சோர்வு ஏற்படுகிறது. அன்றாட பாடங்களை படிக்க முடிவதில்லை. சிலர் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களில் ஏறிச் செல்கின்றனர். பஸ் விடக்கோரி பல முறை போராடியும் பலன் இல்லை. எனவே, மாணவர்களின் நலன்கருதி, பள்ளி நேரத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு போக்குவரத்து நிர்வாகம், இப்பகுதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பள்ளிக்கு செல்லும் வழியில், வரட்டாறு செல்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, 3 கி.மீ., துாரம் கூடுதலாக சுற்றி செல்ல வேண்டியுள்ளது. வரட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

