/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம்
/
கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம்
கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம்
கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : மே 05, 2024 03:29 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த, ஆய்வு கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமையில், தர்மபுரி கலெக்டர் சாந்தி முன்னிலையில் நடந்தது.
இதில், முதன்மை செயலாளர் செந்தில்குமார் பேசியதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டும் பயன்படுத்த வேண்டும். மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில், தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க அனைத்து பஞ்., செயலாளர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பி.டி.ஓ., ஆய்வுக்கூட்டம் நடத்தி, குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது. மின் துறை சார்பில், ஒருமுனை மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில், மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூடுதல் இயக்குனர் (வீடுகள்) ராஜஸ்ரீ, தர்மபுரி கூடுதல் கலெக்டர் கௌரவ்குமார், கிருஷ்ணகிரி கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், சேலம் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.