/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அவதி
/
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அவதி
ADDED : ஆக 30, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மதியம், 3:30 முதல், அரூர், மோப்பிரிப்பட்டி, சோரி-யம்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்-பாடி, பெத்துார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தி விட்டு விட்டு பரவ-லாக மழை பெய்தது.
இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கிய-துடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.அரூர் - சேலம் பைபாஸ் சாலையில், மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாததால், கச்சேரி மேடு, திரு.வி.க., நகர், நான்கு ரோடு உள்ளிட்ட இடங்களில், சாலையில் மழைநீர் பெருக்கெ-டுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.