/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரியூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
/
ஏரியூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
ADDED : நவ 06, 2024 01:19 AM
தர்மபுரி, நவ. 6-
ஏரியூர் ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த ஈச்சம்பாடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 20.42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணியை, அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஏரியூர் முதல் சிடுவம்பட்டி வரை செல்லும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணியை ஆய்வு செய்தார். பின், சாலை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.
மேலும், கோடிஹள்ளி பஞ்.,ல், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தில், பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்கும் பணியை ஆய்வு செய்தார். பின், ஏரியூர் ஒன்றிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ள திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். பி.டி.ஓ., கல்பனா
உடனிருந்தார்.

