ADDED : மே 13, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி,: தர்மபுரி மாவட்ட தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழு கூட்டம், கடத்துாரில் மன்ற தலைவர் பாவலர் மலர்வண்ணன் தலைமையில் நடந்தது.
பாவலர் முல்லையரசு, தமிழ்மகன் இளங்கோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதனகோபாலன் வரவேற்றார். பாலக்கோடு, அரூர் தாலுகாவில் உறுப்பினர் சேர்ப்பது, ஆண்டு விழாவில், 'தகடூர் கவிகள்' என்னும் தலைப்பில் கவிதை தொகுப்பு நுால் வெளியிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவிஞர்கள் கூத்தப்பாடி பழனி, முகுந்தமாதவன், கோகுல், காளியப்பன், வெங்கடேசன், உதயசூரியன், கோபாலகிருஷ்ணன், சம்பத், குறள்மொழி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வத்தலாபுரம் முருகேசன் நன்றி கூறினார்.