/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகளை திறக்க ஆர்வம் காட்டாத கட்சியினர்
/
எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகளை திறக்க ஆர்வம் காட்டாத கட்சியினர்
எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகளை திறக்க ஆர்வம் காட்டாத கட்சியினர்
எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகளை திறக்க ஆர்வம் காட்டாத கட்சியினர்
ADDED : ஜூலை 01, 2024 04:06 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரியில், லோக்சபா தேர்தலையொட்டி மார்ச், 16 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணியால் மூடப்பட்டன. பாப்பிரெட்டிப்பட்டி பகுதியிலுள்ள கவுண்டம்பட்டி, பொம்மிடி, புதுப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, வெங்கட்சமுத்திரம் மற்றும் பையர்நத்தத்தில் இருந்த, அம்பேத்கர் சிலையை தவிர, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., காந்தி, காமராஜர் சிலைகள் துணியால் மூடப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிகள் கடந்த ஜூன், 6 ல் விலக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மீது மூடப்பட்ட துணிகளை, அந்தந்த கட்சியினர் விலக்கினர். ஆனால், அதன்பிறகு, 25 நாட்களாகியும், பையர்நத்தத்திலிருந்த, எம்.ஜி.ஆர்., காமராஜர் சிலைகளை மூடிய துணிகளை, அ.தி.மு.க., --- காங்., கட்சியினர் திறக்க ஆர்வம் காட்டவில்லை.
அ.தி.மு.க.,வை சேர்ந்த மாஜி அமைச்சர் முல்லைவேந்தன், மாஜி எம்.எல்.ஏ., குப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, ஒன்றிய செயலாளர் சேகர், மாஜி யூனியன் சேர்மன் ராமச்சந்திரன்,
வஜ்ஜிரவேல் உள்ளிட்ட
நிர்வாகிகள் பலர், இப்
பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.