/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வான சந்தோஷ் என்பவரை தேடி வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் கடும் நோய்கள் பரவும்; பசுமை தாயகம் சவுமியா பேச்சு

ADDED : செப் 01, 2024 05:01 AM
நல்லம்பள்ளி: ''காலநிலை மாற்றத்தால் கடுமையான நோய்கள் பரவும் அபாயம் உள்ளது,'' என, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா பேசினார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, விஜய் வித்யாலயா மகளிர் கல்-லுாரியில் நேற்று நடந்த, 'காலநிலை மாற்றம்' குறித்த கருத்த-ரங்கில் அவர் பேசியதாவது: உலகளவில் கடந்த, 2023ல் கால-நிலை மாற்றம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், புவி வெப்பமடைதல், காலநிலை, அவசர நிலை உள்ளிட்டவை முக்கியமானதாக உள்ளது. தொழிற்சாலைகளின் நச்சு காற்றாலும், புறஊதா கதிர்களாலும், பூமி வெப்பமடைந்து, பனி மலைகள் உருக தொடங்கி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை முழுமையாக மாறிவிட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் வருடத்திற்கு, விவசாயம் மற்றும் குடிநீர் என அனைத்துக்ம், 2 டி.எம்.சி., தண்ணீர் தேவை. ஆனால், கர்நா-டகா அணைகளில் திறக்கப்பட்டு காவிரியாற்றில் வந்த தண்ணீர், ஒரு மணி நேரத்தில் மட்டுமே, 2 டி.எம்.சி., தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. அந்த நீரை சேகரிக்க நம்மிடம் முறையான, நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லை. காலநிலை மாற்றங்களால் கடும் நோய்கள் பரவுமென்று, உலக நாடுகள் எச்சரித்துள்ளன.
இதிலிருந்து தற்காத்து கொள்ள குப்பை, பிளாஸ்டிக், காற்று மாசு இல்லாத, சூழலை உருவாக்க, மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கல்லுாரி வளாகத்தில், 1,500 மரக்கன்று நடும் நிகழ்ச்சியை சவுமியா தொடங்கி வைத்தார். விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் மணிவண்ணன், இளங்கோவன் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர்கள்,
மாணவியர் கலந்து கொண்டனர்.