ADDED : ஏப் 13, 2024 07:45 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி மோனிகா, 27. கடந்த, 9 மதியம், 1:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
* ஓசூர், கோகுல் நகர் நந்தனா லே அவுட்டை சேர்ந்தவர் சிவலிங்கம், 44. காரப்பள்ளியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடன் சுமை காரணமாக மனமுடைந்து காணப்பட்டவர் கடந்த, 10 மதியம், 1:00 மணிக்கு, தொழிற்சாலையில் இருந்து வெளியே சென்றார். அவர் திரும்பி வராததால் மனைவி பிரியா, 38, கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
* சூளகிரி அடுத்த கெட்டூரை சேர்ந்தவர் மாராச்சாரி மகள் சரிதா, 21. தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 10 காலை சூளகிரி பஸ் ஸ்டாண்டில் இறங்கியவர் மாயமானார். அவரது தந்தை சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், சூளகிரி பருவீதியை சேர்ந்த ராமன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
