/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரில் ரூ-.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
காரில் ரூ-.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரில் ரூ-.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரில் ரூ-.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 01, 2024 04:07 AM
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சொகுசு காரில் கடத்தி வந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே, காடுசெட்டிப்பட்டி சாலை வழியாக, புகையிலை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில்,
பஞ்சப்பள்ளி எஸ்.ஐ., மாதையன், எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகம், மாதேஸ்வரன் மற்றும் அருண் பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. போலீசார் துரத்தி சென்றபோது, கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த ஓட்டுனர் தப்பினார். காரை சோதனை செய்தபோது, அதில், 35 மூட்டைகளில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரிந்தது.
புகையிலை பொருட்களுடன் சேர்ந்து, சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை பஞ்சப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.