/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 01, 2024 02:08 AM
தர்மபுரி:தர்மபுரி நான்குரோட்டில், போக்குவரத்து போலீசார், 18 வயது நிரம்பாத கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில், போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 18 வயது ஆகாமல் வாகனம் ஓட்டும் சில மைனர்களுக்கும், அவர்களுக்கு வாகனம் கொடுப்பவர்களுக்கும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தர்மபுரியை சேர்ந்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவியர் வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். போக்குவரத்து
துறை எஸ்.ஐ.,க்கள் சின்னசாமி, சதீஷ், ரகுநாதன், விநாயகமூர்த்தி, கார்த்திக் கலந்து கொண்டனர்.