/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முன்மாதிரி கிராமங்களை உருவாக்க பயிற்சி முகாம்
/
முன்மாதிரி கிராமங்களை உருவாக்க பயிற்சி முகாம்
ADDED : ஆக 08, 2024 01:52 AM
தர்மபுரி, தமிழக அரசு வழிகாட்டுதலின் படி, தர்மபுரி மாவட்ட வள மைய அலுவலகத்தில், பஞ்.,களுக்கான வளர்ச்சி குறியீடுகள் அடிப்படையில், முன்மாதிரி கிராமங்களை உருவாக்க, வட்டார அளவிலான அலுவலர்களுக்கு, 2 நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் மணிவாசகம் தலைமை வகித்தார்.
இதில், கிராம பஞ்., வளர்ச்சி திட்டம் தயாரித்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான, 9 கருப்பொருட்கள், அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், கிராம பஞ்.,களை தரவரிசை படுத்துவதில், பிறதுறை அலுவலர்களின் பொறுப்புகள், உள்ளூர் அளவில் நீடித்த நிலையான, வளர்ச்சிக்கான இலக்குகளை செயல்படுத்த வேண்டிய நிதி இல்லா செயல்பாடுகள் மற்றும் குறைந்த நிதி தேவைப்படும் செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
இதில், 7 அரசுத்துறைகளை சேர்ந்த, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமூக நல மேற்பார்வையாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், குழந்தை நல அலுவலர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், வட்டார வளர்ச்சி கண்காணிப்பாளர் ரங்கநாதன், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.