நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, ஆக.
29-
தர்மபுரி, சோகத்துார் கூட்ரோட்டிலுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். இதில், 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணி, அனைத்து சார்பு அணிகளை சேர்ந்த மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகாந்த், நகர அணி தலைவர் முத்துகுமார், மாவட்ட விவசாயிகள் அணி தலைவர் தினேஷ்ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

