ADDED : செப் 26, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், கடத்துார் அரசு ஆரம்ப சுகா-தார நிலையத்தில், எச்.பி.வி., தடுப்பூசி சிறப்பு முகாம் மருத்துவ அலுவலர் கனல் வேந்தன் தலைமையில் நடந்தது.
இதில், நத்தமேடு மற்றும் லிங்கநாய்க்கன-ஹள்ளி துணை சுகாதார நிலையங்களுக்கு உட்-பட, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்-நிலைப் பள்ளிகளில் பயிலும், 14 வயதிற்கு மேற்-பட்ட, 15 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு எச்.பி.வி. தடுப்பூசி செலுத்தப்பட்டது. எதிர்கா-லத்தில் ஏற்படக்கூடிய கருப்பை வாய் புற்று நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்க, சிறப்பு தடுப்-பூசி போடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்-டது.இதில், 35 மாணவியருக்கு இத்தடுப்பூசி செலுத்-தப்பட்டது. பகுதிநேர சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
