தி.மலை தீப திருவிழாவிற்காக மாற்றுப்பாதையில் வாகனங்கள்
தி.மலை தீப திருவிழாவிற்காக மாற்றுப்பாதையில் வாகனங்கள்
ADDED : நவ 23, 2026 12:38 AM
அ நிறம் | அளவு
அரூர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, திருவண்ணாமலை நகருக்குள், நேற்று மாலை, 6:00 மணி முதல், வரும், 25ம் தேதி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு அம்மாவட்ட காவல்துறை தடைவிதித்துள்ளது.நேற்று அரூரில், நடேசா பெட்ரோல் பங்க், கச்சேரிமேடு, அனுமன்தீர்த்தம், தீர்த்தமலை, நரிப்பள்ளி ஆகிய இடங்களில் முகாமிட்ட போலீசார், கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை, அரூர், ஊத்தங்கரை, திருப்பத்துார், வாணியம்பாடி வழியாகவும், அதேபோல், அரூர், நரிப்பள்ளி, தானிப்பாடி வழியாக, திருவண்ணாமலைக்கு செல்லும் கனகர வாகனங்களை, ஊத்தங்கரை, திருப்பத்துார், வேலுார் வழியாகவும், மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.
