ADDED : ஆக 26, 2024 08:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தே.மு.தி.க., நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்தின், 72-வது பிறந்த நாளையொட்டி, அரூர் கச்சேரிமேட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேட்ராவ் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில், விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடினர்.

