/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
/
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
ADDED : மே 28, 2024 07:45 AM
அரூர்: சீரான குடிநீர் வழங்க வேண்டும் என, புறாக்கல் உட்டை கிராம மக்கள், அரூர் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட புறாக்கல் உட்டையில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு கடந்த கடந்த, 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும், ஒகேனக்கல் குடிநீரும் வினியோகம் செய்யப்படாததால், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, கிராம மக்கள் பலமுறை பஞ்., நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள், குடிநீர் வசதி செய்யாமல் மெத்தனம் காட்டி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த, 25க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் குமரேசன், தங்கராஜ், ஜெய்சங்கர், சொக்கலிங்கம் உள்ளிட்டோர், காலிக்குடங்களுடன் நேற்று பகல், 11:45 மணிக்கு அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பி.டி.ஓ., இளங்குமரன், குடிநீர் வசதி செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.