/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனவிலங்குகள் தாகத்தை தீர்க்க தொட்டிகளில் தண்ணீர்
/
வனவிலங்குகள் தாகத்தை தீர்க்க தொட்டிகளில் தண்ணீர்
ADDED : ஏப் 28, 2024 04:00 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வருவாய் கோட்டத்தில், அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய, 4 வனச்சரகங்கள் உள்ளன. இதில், மான், முயல், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. தற்போது நிலவும் கடும் வறட்சியால் மான் மற்றும் காட்டெருமைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும்போது வாகனங்களில் அடிபட்டும், கிணற்றில் விழுந்தும், நாய்களால் கடித்தும் உயிரிழக்கும் நிலையுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, மொரப்பூர் வனத்துறை சார்பில், கீழ்மொரப்பூர், அரூர் மற்றும் கவரமலை காப்புக்காடுகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சக்தியுடன் கூடிய மின் இணைப்பு உதவியுடன் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், 6 இடங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் மற்றும், 45 இடங்களில் சிமென்ட் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், கசிவுநீர் குட்டைகளில், டிராக்டர் டிப்பர் மூலம் தண்ணீர்
ஊற்றப்பட்டு வருகிறது.

