/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் வழங்க கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்
/
குடிநீர் வழங்க கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்
குடிநீர் வழங்க கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்
குடிநீர் வழங்க கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்
ADDED : ஆக 09, 2024 03:12 AM
அரூர்: அரூர் அருகே, குடிநீர் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிச்செட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட பாப்பிசெட்டிப்பட்டியில், 700க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், குடிநீர் வினியோகம் நடந்து வந்தது. கடந்த, 4 மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பழுதால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், பொது கிணறும் துார்வாரப்படவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகம், கடத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த, 70க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் நேற்று காலை, 9:00 மணிக்கு அரூர் - கடத்துார் சாலையில், பாப்பிசெட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பாப்பிரெட்டிப்-பட்டி தாசில்தார் வள்ளி, பி.டி.ஓ.,க்கள் ரேணுகா, கலைச்செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வாரத்-திற்குள், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்-தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 11:00 மணிக்கு கலைந்து சென்றனர்.