/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை
/
மாணவி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை
மாணவி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை
மாணவி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை
ADDED : ஆக 22, 2024 02:04 AM
தர்மபுரி, ஆக. 22-
தர்மபுரியில், பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு, 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
தர்மபுரி
மாவட்டம், அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி, 9 ம்
வகுப்பு படித்து வந்தார். கடந்த, 2017 ல் அதே பகுதியை சேர்ந்த,
கூலித்தொழிலாளி சரத்குமார், 26, சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச்சென்று,
பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகார் படி, அரூர் போலீசார் போக்சோவில்
சரத்குமாரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, தர்மபுரி போக்சோ
நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிந்த நிலையில்,
சரத்குமார் குற்றம் செய்தது உறுதியானதால் அவருக்கு, 13 ஆண்டு சிறை தண்டனை,
15,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.