/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
1 கிலோ சில்லி சிக்கன், பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள்
/
1 கிலோ சில்லி சிக்கன், பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள்
1 கிலோ சில்லி சிக்கன், பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள்
1 கிலோ சில்லி சிக்கன், பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள்
ADDED : ஜன 18, 2024 10:29 AM
தர்மபுரி: தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கபடி, வலுக்கு மரம் ஏறுதல், பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை தட்டிசெல்வர்.
காணும் பொங்கலையொட்டி நேற்று, தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டியில், வித்யாசமான முறையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்ட, விரைவாக சிக்கன் பிரியாணி, சிக்கன் வருவல் சாப்பிடுத்தல், 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடித்தல் போட்டிகள் நடந்தன. இதில், 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அதிவேகமாக பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஷாலினி, 18, என்பவர், ஒரு கிலோ பிரியாணியை வேகமாக சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். தொடர்ந்து, ஒரு கிலோ சில்லி சிக்கன் குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டியில் பச்சியப்பன், 26, என்பவர், 10 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதேபோல், கூல்டிரிங்ஸ் குடிக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இப்போட்டியில், ராஜ்குமார், 25, என்பவர், 5 நிமிடத்தில், 2 லிட்டர் கூல்ட்ரிங்ஸ் குடித்து முதல் பரிசை பெற்றார். இப்போட்டிகளால் முக்கல்நாயக்கன்பட்டியில், மக்கள் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் பொழுதை கழித்தனர். இந்த வித்யாசமான போட்டியை பொதுமக்கள் மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் கண்டுகளித்தனர்.