/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெறிநாய் கடித்து 10 பேர் காயம் வெளியே நடமாட மக்கள் அச்சம்
/
வெறிநாய் கடித்து 10 பேர் காயம் வெளியே நடமாட மக்கள் அச்சம்
வெறிநாய் கடித்து 10 பேர் காயம் வெளியே நடமாட மக்கள் அச்சம்
வெறிநாய் கடித்து 10 பேர் காயம் வெளியே நடமாட மக்கள் அச்சம்
ADDED : பிப் 17, 2025 02:52 AM
அரூர்: அரூர் அருகே, வெறி நாய் கடித்ததில், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.பட்டியை சேர்ந்த காசி-நாதன் என்பவரது வளர்ப்பு நாய்க்கு ரேபீஸ் நோய் தாக்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அந்த நாய் தெருவில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த தீபா, 46, உண்ணாமலை, 42, பழனிசாமி, 55, ஆகியோரை விரட்டி விரட்டி கடித்தது. தொடர்ந்து நேற்று காலை, 7:30 மணிக்கு இந்துமதி, 35, கல்யா-ணசுந்தரம், 60, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோரை கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்கிராம பகு-தியில் வெறிநாய் மறைந்திருந்து கடிப்பதால், பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர். குழந்தை-களை பாதுகாப்பாக வைத்திருக்க வி.ஏ.ஓ., மூலம் அறிவுறுத்தப்-பட்டுள்ளது. ரேபீஸ் நோய் தாக்கிய நாயை பிடிக்கும் பஞ்., நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.