ADDED : மே 16, 2026 04:43 AM

தர்மபுரி; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய-ளிப்பு சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தர்-மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கை-களை வலியுறுத்தி, நேற்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், 100 நாள் வேலை திட்டத்தில், புதிய சட்டத்தினை ரத்து செய்து, பழைய சட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தினை தொடர்ந்து அமலாக்க வேண்டும். ஆண்டுக்கு, 200 நாள் வேலை, தின சம்பளமாக, 700 ரூபாய் வழங்க வேண்டும். அரசு பணியாளர்கள்-, ஊழியர்களுக்கு வழங்குவது போல், 6 மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்த்த வேண்டும். வேலைக்கு வரும் இடத்தில், 3 முறை ஆன்லைன் மூலம் புகைப்-படம் எடுத்தால் தான் வேலை என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
