தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 100 சதவீதம் ஓட்டுப்பதிவு மகளிர் குழு விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டுப்பதிவு மகளிர் குழு விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டுப்பதிவு மகளிர் குழு விழிப்புணர்வு


ADDED : மார் 26, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி யில் 100, சதவீதம் ஓட்டு போட வலியுறுத்தி, கையில் மெகந்தி வரைந்து மகளிர் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், 100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய மகளிர் திட்டம் சார்பில், 300க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில் கையில் மெகந்தி வரைந்து, '100 சதவீதம் ஓட்டளிப்போம்' என உறுதிமொழி எடுத்தனர்.

இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 19 ஊராட்சிகளிலும் மகளிர் திட்டத்தின் மூலமாக, கையில் மெகந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன் தாசில்தார் பார்வதி, பி.டி.ஓ.,க்கள் தனலட்சுமி, நீலமேகம், தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக் உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், வட்டார மேலாளர் அருண்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us