/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாரத மாதா கோவிலில்அத்துமீறி நுழைந்த வழக்கில்பா.ஜ.,வினர் 11 பேர் விடுதலை

ADDED : ஏப் 23, 2025 01:22 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில், பாரத மாதா நினைவாலயம் உள்ளது. இங்கு கடந்த, 2022 ஆக., 11ல் போலீசார் தடையை மீறி உள்ளே நுழைந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், பா.ஜ., முன்னாள் தர்மபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர், கல்வி பிரிவு நிர்வாகி இமானுவேல், மாவட்ட துணைத் தலைவர் முரளி, பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம், ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் உட்பட, 11 பேர் மீது, 12 பிரிவுகளில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு, தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும், மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்தும், அதன் பின்னர், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த இறுதி விசாரணையில், ராமலிங்கம் உட்பட, 11 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.