ADDED : ஏப் 25, 2026 05:27 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் நடந்த சட்டபை தேர்தலில், இறுதிகட்ட ஓட்டுப்பதிவில் மொத்தமாக, 11.28 லட்சம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, தர்மபுரி தொகுதியில், 2.33 லட்சம் ஓட்டுகள் பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் என, 5 சட்டசபை தொகுதிகளில், 1,596 ஓட்டுசாவடி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், 6,29,980 ஆண்கள், 6,21,887 பெண்கள், 152 திருநங்கைகள் என மொத்தம், 12,52,019 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை, 7:00 மணி முதல், ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து
ஓட்டளித்தனர்.
தர்மபுரி மாவட்ட அளவில் காலை, 9:00 மணி நிலவரப்படி, 17.91 சதவீதம் ஓட்டு பதிவானது. 11:00 மணிக்கு, 38.28 சதவீதம், மதியம், 1:00 மணிக்கு, 59.02 சதவீதம், 3:00 மணிக்கு, 74.04 சதவீதம் மாலை, 5:00 மணி நிலவரப்படி, 87.28 ஓட்டுப்பதிவானது. இறுதி கட்டமாக மாலை, 6:00 மணிக்கு, 90.11 சதவீதம் ஓட்டுப்பதிவானது. பாலக்கோடு தொகுதியில், 92.57 சதவீதம், பென்னாகரம் - 90.66, தர்மபுரி - 89.44, பாப்பிரெட்டிப்பட்டி - 90.34 அரூர் (தனி) - 87.63 சதவீதம் என மாவட்டத்தில் மொத்த சராசரியாக - 90.11 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
பாலக்கோடு தொகுதியில், 2,22,470 ஓட்டுகள் பதிவானது. பென்னாகரம், 2,25,401, தர்மபுரி, 2,33,205, பாப்பிரெட்டிப்பட்டி, 2,31,851, அரூர் (தனி), 2,15,306 என மாவட்டத்தில் மொத்தம், 11,28,233 ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
