/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அண்ணாதுரையின் 116வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
/
அண்ணாதுரையின் 116வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
ADDED : செப் 23, 2024 04:01 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், அ.தி.மு.க., சார்பில் அண்ணாது-ரையின், 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பாப்பிரெட்-டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலை-மையில் நடந்தது.
மாவட்ட பொருளாளர் நல்லதம்பி முன்-னிலை வகித்தார். நகர செயலாளர் தென்னரசு வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் அறிவானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மதிவாணன், சேகர், நிர்வாகிகள் வஜ்ஜி-ரவேல், பெரியகண்ணு, ரவி, புரட்சிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.