தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் சப்-டிவிஷனில் 132 துப்பாக்கி ஒப்படைப்பு

அரூர் சப்-டிவிஷனில் 132 துப்பாக்கி ஒப்படைப்பு

அரூர் சப்-டிவிஷனில் 132 துப்பாக்கி ஒப்படைப்பு


ADDED : மார் 18, 2026 08:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 08:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:தமிழகத்தில் ஏப்., 23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்-படுமென கடந்த, 15ல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து, உரிமம் பெற்ற துப்பாக்கி-களை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க, காவல்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்-பட்ட, கம்பைநல்லுார், மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் ஆகிய, 9 போலீஸ் ஸ்டேஷன்களில், உரிமம் பெற்ற, 132 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஒப்படைக்காத நபர்களிடமிருந்து அவற்றை பெற நட-வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us