/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.1.79 கோடி அபராதம்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.1.79 கோடி அபராதம்
ADDED : அக் 11, 2024 01:20 AM
போக்குவரத்து விதிமீறல்
ரூ.1.79 கோடி அபராதம்
தர்மபுரி, அக். 11-
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு, 1.79 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என, தர்மபுரி ஆர்.டி.ஓ., தாமோதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஏப்., முதல் செப்., மாதம் வரை, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தர்மபுரி பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், தரணீதர், வெங்கிடுசாமி, குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், 9,281 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 3,389 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன.
இதில், காலாண்டு வரி செலுத்தாமல் வாகனங்கள் ஓட்டுதல், தகுதிச்சான்று, இன்சூரன்ஸ், புகைச்சான்று புதுப்பிக்காமல் ஓட்டுதல், அனுமதி சீட்டு இன்றி ஓட்டியதாக, 400 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி சென்றது, அனுமதி சீட்டு இன்றி இயக்கியது, அதிவேகமாக இயக்கியது, தகுதி சான்று பெறாமல் இயக்கியது, சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கியது என மொத்தம், 2,120 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரசுக்கு சாலை வரியாக, 5.84 லட்சம் ரூபாய் மற்றும் இணக்க கட்டணமாக, 38.92 லட்சம் ரூபாய் என மொத்தம், 89.76 லட்சம் ரூபாய் உடனடி கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கடந்த, 6 மாதத்தில், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலக செயலாக்க பணிகள் மூலம் அரசுக்கு மொத்தம், 1.79 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.