/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இளைஞர் பெருமன்ற 18வது மாநில மாநாடு
/
இளைஞர் பெருமன்ற 18வது மாநில மாநாடு
ADDED : ஜன 27, 2025 02:42 AM
தர்மபுரி: தர்மபுரியில், இ.கம்யூ., கட்சி சார்பில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், 18வது மாநில மாநாடு ஜன., 26 முதல் 28 வரை, 3 நாட்கள் நடக்கிறது. நேற்று நடந்த மாநாட்டில், கட்-சியின் மாநில செயலாளர்
முத்தரசன் பேசியதாவது:
தமிழகத்தில் சில வகுப்புவாத சக்திகள், மதவாதம், இனவாதம் ஆகியவற்றை வளர்க்க முயற்சி செய்கின்றன. அம்பேத்கர் உரு-வாக்கிய அரசியலமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சமத்துவத்தை பாதுகாக்க வேண்டும். பிறர் மதிக்கக்கூடிய வாழ்க்-கையை நாம் வாழ வேண்டும். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்-களின் பக்கம் நாம் நிற்க வேண்டும். தமிழகத்தில் வள்ளுவர், வள்-ளலார், ஈ.வெ.ரா., திரு.வி.க., கொள்கைகளை நாம் ஏற்கனவே உள்வாங்கி உள்ளோம். அதன்படி செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''தி.மு.க., - இ.கம்யூ., இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்-படுகின்றன. தி.மு.க., ஈ.வெ.ரா., வழியில் வந்த இயக்கம். தமிழ-கத்தில் ஈ.வெ.ரா.,வை வைத்து தான் அரசியல் நடக்கிறது. தமிழ-கத்தில், கவர்னர், சீமான் ஆகியோர் ஈ.வெ.ரா.,வுக்கு எதிரான அர-சியலை செய்கிறார்கள். அந்த அரசியல் எடுபடாது,'' என்றார்.

