அரூர், அரூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் மும்தாஜ், 30. இவருக்கு, 2 மகள் மற்றும் ஆரிப், 13, என்ற மகன் உள்ளனர். மும்தாஜ் தன் கணவரை பிரிந்து, பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
ஆரிப், அரூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 7ல் இரவு, 7:30 மணிக்கு அதே பகுதியில் வசிக்கும் ஆரிப்பின் நண்பர் ராகேஷ், 14, என்பவர் சைக்கிளில் ஆரிப்பின் வீட்டிற்கு வந்துள்ளார். பின், மும்தாஜியிடம் தன்னுடன் ஆரிப்பை வீட்டிற்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, ராகேஷ்சுடன் ஆரிப்பை, மும்தாஜ் அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின், இரவு வெகு நேரமாகியும் ஆரிப் வீடு திரும்பவில்லை. பின், ராகேஷ் குடும்பத்தினரும் மொபைல்போனில் தொடர்பு கொண்டு மும்தாஜ் கேட்ட போது, ஆரிப், ராகேஷ் இருவரும் வீட்டிற்கு வரவில்லை எனக் கூறியுள்ளனர். இது குறித்து மும்தாஜ் அளித்த புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ஆரிப், ராகேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.